இஸ்தான்புல், பிப் 20 - காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலியப் படைகள்
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் மேற்கொண்டு வரும்
தாக்குதல்களில் இதுவரை 29,092 பேர் உயிரிழந்துள்ளதாகப் பாலஸ்தீன
சுகாதார அமைச்சு கூறியது.
ஆக்கிரமிப்பு படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக மேலும்
69,028 பேர் காயமுற்றுள்ளதாக அமைச்சை மேற்கோள் காட்டி அனாடோலு
செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கட்டிட இடிபாடுகளிலும் சாலைகளிலும் மேலும் பலர் சிக்கியிருக்கும்
நிலையில் அவர்களைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அது
குறிப்பிட்டது.
இந்த தொடர்ச்சியான போர் காரணமாக காஸா வட்டாரத்திலுள்ள சுமார் 85
விழுக்காட்டு மக்கள் வேறு இடங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
மேலும் அப்பகுதியிலுள்ள 60 விழுக்காட்டுக் கட்டிடங்கள்
சேதப்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் உணவு, சுத்தமான நீர் மற்றும்
மருந்துகளுக்கு பெரும் போராட்டம் நடத்தி வருவதாக ஐ.நா. கூறியது.


