ஷா ஆலம், பிப் 16: சீ ஏசியா புள்ளிவிவரக் கணக்கெடுப்பின்படி, தென்கிழக்கு ஆசியாவில் திருமணம் ஆகாமல் இருப்பவர்களைக் கொண்டிருப்பதில் மலேசியா மூன்றாவது இடத்தில் உள்ளது (44.68 சதவீதம்).
தனி நபர்களை கொண்டிருப்பதில் பிலிப்பைன்ஸ் நாடு 49 சதவீதம் என்ற கணக்கில் முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து புருணை 44.9 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், கம்போடியா 44.6 சதவீதம், மியான்மர் 29 சதவீதம், தாய்லாந்து 23 சதவீதம், இந்தோனேஷியா 22 சதவீதம் மற்றும் சிங்கப்பூர் 20 சதவீதம் என பதிவு செய்துள்ளன.
லாவோஸ் 17 சதவீதம், வியட்நாம் 16 சதவீதம் மற்றும் திமோர்-லெஸ்டே 13 சதவீதம் என மூன்று நாடுகளும் மிகக் குறைந்த தனி நபர்கள் எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன.
அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளமான சீஏசியா மூலம் வெளியிடப்பட்ட ஆய்வில், திருமணமாகாதவர்கள், விவாகரத்து செய்தவர்கள், பிரிந்தவர்கள் அல்லது துணையை இழந்தவர்கள் என்று தனி நபர்களை வரையறுக்கிறது.
ஆய்வின் ஆதாரம் 2021 இல் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை பிரிவு (ஐ.நா.) வழங்கிய மக்கள்தொகை மற்றும் ஒற்றையர் புள்ளிவிவரங்களின் தரவுகள் ஆகும்.
"1970 முதல் 2021 வரை உலகளவில் 1.6 பில்லியனுக்கும் அதிகமான தனி நபர்களின் தகவல்களை ஐ.நா. சேகரித்தது," என்று தெரிவிக்கப்பட்டது.


