ANTARABANGSA

மேற்கு கரை குடியிருப்பாளர்களின் நிலங்கள் பறிப்பு- இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம்

5 பிப்ரவரி 2024, 9:00 AM
மேற்கு கரை குடியிருப்பாளர்களின் நிலங்கள் பறிப்பு- இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம்

ஹெப்ரோன், பிப் 5 - மேற்குக் கரையைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள் குறிப்பாக

ஜோர்டான் பள்ளத்தாக்கு மற்றும் தென் ஹெப்ரானோனில் உள்ள

முஸஃபார் யாத்தா பகுதிகளில் வசிப்பவர்கள் கடந்தாண்டு அக்டோபர்

மாதம் 7ஆம் தேதி தொடங்கி இஸ்ரேலிய சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களின் அட்டூழியங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

அங்குள்ள தோட்ட உரிமையாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போரின்

உற்பத்திப் பொருள்கள், கால்நடைகள் மற்றும் குடியிருப்புகள் இஸ்ரேலிய

ஆக்கிரமிப்பாளர்களால் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்ட நிலையில்

அவர்கள் நிலைகுலைந்து எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் அடங்கிய பல்வேறு குழுவினர்

இராணுவத்தினரின் துணையுடன் தினசரி அங்கு மேற்கொள்ளும்

ஆக்கிரமிப்புகளால் அக்குடியிருப்பாளர்கள் கடும் நெருக்கடிக்கு

ஆளாகியுள்ளனர்.

மேற்கு கரை மற்றும் ஜெருசலத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால்

பறிக்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு 41,000 ஹெக்டரை எட்டிவிட்டதாக

காலனித்துவ சுவர் எதிர்ப்பு ஆணையத்தின் ஆவண மற்றும் பதிப்பக

தலைமை இயக்குநர் அமிர் டாவுட் கூறினார்.

மேற்கு கரையில் பாலஸ்தீனர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும்

நோக்கில் பொது நிர்வாகம் அல்லது காலனித்து மன்றம் என்ற பெயரில்

தங்களின் ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்காக இஸ்ரேல்

மேற்கொண்டு வரும் பாலஸ்தீனர்க்ளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை

எல்லையே இல்லாமல் தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களின் கீழ் குறுகியக் கால

நோட்டீஸ் பாலஸ்தீன குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

பாலஸ்தீன மக்களின் நிலங்களைப் பறிப்பது அவர்களைத் தாக்குவது போன்ற செயல்களை இஸ்ரேல் கண்டும் காணாது போலிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.