ECONOMY

ஒராங் அஸ்லி குழந்தைகளின் கல்வியில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது-  

27 ஜனவரி 2024, 9:03 AM
ஒராங் அஸ்லி குழந்தைகளின் கல்வியில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது-  

ஷா ஆலம், ஜனவரி 27 - ஒராங் அஸ்லி குழந்தைகளின்  கல்வி புறக்கணிப்பு பிரச்சனை இந்த ஆண்டு மாநில அரசாங்கத்தின் முதன்மையான கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒராங் அஸ்லி மற்றும் சிறுபான்மை விவகாரங்களுக்கான மாநில செயற்குழு உறுப்பினர் வி. பாப்பா ராய்டு கூறுகையில், பல்வேறு காரணிகளால் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு சமூகத்தில் இன்னும் குறைவாகவே உள்ளது.

“அவர்கள் இன்னும் கல்வியை முக்கியமற்ற தாகவே பார்க்கிறார்கள். உண்மையில், இந்த ஒராங் அஸ்லி பெற்றோர்கள் சிலர் தங்கள் பிள்ளைகளை தோட்டங்களில் தொழிலாளிகளாக வேலை செய்ய அனுப்புகிறார்கள்.

“ குழந்தைகள் தான் நமது எதிர்காலம். அவர்கள் வெற்றியடைவதையும், பின்னர் தேசத்திற்குப் பங்களிப்பையும் காண நாம் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம்,” என்று அவர் சிலாங்கோர்கினியிடம் கூறினார்.

இந்த திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆண்டு முதல் மாநிலத்தில் உள்ள 74 ஒராங் அஸ்லி கிராமங்களுக்கும், ஆறு பள்ளிகளுக்கும் தொடர் வருகைகளை மேற்கொண்டு வருவதாக பாப்பாராய்டு கூறினார்.

ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையும் (ஜகோவா) மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புச் சலுகைகளை வழங்கி உதவுவதாகவும் அவர் கூறினார்.

தனித்தனியாக, ஒராங் அஸ்லி மத்தியில் அதிகரித்து வரும் மது அருந்துதல் தொடர்பான சமூகப் பிரச்சனையை தீர்க்கும் முயற்சியில் தார்மீக மேம்பாடு தொடர்பான திட்டங்களை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக பாப்பராய்டு கூறினார்.

“ தொடர்ந்து மது அருந்துபவர்களை சந்தித்த அனுபவம் தனக்கும் உண்டு. இந்த விவகாரம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் இதன் மீது ஆய்வு நடத்துவது அவசியம், அதற்கு குழுவை அமைக்கிறேன்,'' என்றார்.

இதுவரை ஒதுக்கப் பட்டதில் 2024 சிலாங்கூர் பட்ஜெட்டின் கீழ், மாநில அரசாங்கம் ஒராங் அஸ்லி சமூக மேம்பாட்டிற்காக RM2.5 மில்லியன் ஒதுக்கியுள்ளது  ஒரு  சாதனையாகும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.