Budget

தீபகற்ப மலேசியாவில் உள்ள ''சாரா திட்ட'' உதவி பெறுநர்களுக்கு திங்கட்கிழமை (ஜனவரி 22) முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்

20 ஜனவரி 2024, 4:26 AM
தீபகற்ப மலேசியாவில் உள்ள  ''சாரா திட்ட'' உதவி பெறுநர்களுக்கு திங்கட்கிழமை (ஜனவரி 22) முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்

புத்தரா ஜெயா, ஜன 19 ; தீபகற்ப மலேசியாவில் உள்ள  சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (சாரா) என்னும்  திட்டத்தில் உதவி பெறுநர்களுக்கு திங்கட்கிழமை (ஜனவரி 22) முதல் சாரா வரவு வைக்கப்படும், அதே சமயம் சபா, சரவாக் மற்றும் லாபுவான்  கூட்டரசு பிரதேசத்தில்  உள்ள பெறுநர்கள் பிப்ரவரி 19  முதல் சாரா பண உதவியைப் பெறத் தொடங்குவார்கள். அவர்கள்  (சபா, சரவாக் மற்றும் லாபுவான்)  பெறுநர்கள், மற்றும் மனைவி அல்லது கணவன் இல்லாத மூத்த குடிமக்களுக்கு RM600 மற்றும் ஒற்றை நபர்களுக்கு RM300  என இரண்டு தவணைகளில் பிப்ரவரி 19 மற்றும் ஆகஸ்ட் 12 அன்று பெறுநரின் வங்கிக் கணக்கின் மூலமோ அல்லது  நாடு முழுவதும் உள்ள  ( BSN)  வங்கி சிம்பானன் நேசனலின் கிளைகளில்  பணமாக வழங்கப்படும்

"கடந்த ஆண்டு ''சாரா திட்டம்''  ஊக்கமளிக்கும்  ஆதரவு பெற்றதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 424 ஆக இருந்த (2023 இல்) பங்குபெறும் சில்லறை விற்பனையாளர்கள் நெட்வொர்க்கை (ஜனவரி 17 முதல்) 515 ஆக அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது.

சாரா திட்டத்தைப் பற்றிய தகவல்களைத் தேடும்போது பொறுப்பற்ற தரப்பினரின் மோசடி வலைதள இணைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் நிதி அமைச்சகம் பெறுநர்களுக்கு நினைவூட்டியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.