(பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை நாளை மேலும் நான்கு இடங்களில் நடைபெறவுள்ளது.
கின்றாரா தொகுதி நிலையிலான விற்பனை ஜாலான் பி.கே.4/1 திறந்த வெளியிலும் அம்பாங் ஜெயா தொகுதி நிலையிலான விற்பனை அம்பாங் வாட்டர்ப்ரோண்ட் லாமான் நியாகாவிலும் கோத்தா கெமுனிங் தொகுதி நிலையிலான விற்பனை தாமான் ஸ்ரீ மூடாவிலும் செமினி தொகுதி நிலையிலான விற்பனை கம்போங் பாசீர் பாரு பள்ளிவாசலிலும்
காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையில் நடைபெறும்.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்
முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும் கம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ
இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு
கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் 2,850 இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனையின் வாயிலாக
இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.


