ALAM SEKITAR & CUACA

புக்கிட் செந்தோசாவில் சாலை (குழி) உள்வாங்கியதை  சரிப்படுத்த MPHS உடனடி நடவடிக்கை

12 ஜனவரி 2024, 12:21 PM
புக்கிட் செந்தோசாவில் சாலை (குழி) உள்வாங்கியதை  சரிப்படுத்த MPHS உடனடி நடவடிக்கை

ஷா ஆலம், 12 ஜன:   உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (எம்பிஎச்எஸ்) பெர்சியாரன் ரோஸ்,  புக்கிட் செந்தோசாவில் சாலை (குழி ஏற்பட்டதை) உள்வாங்கியதை  தொடர்ந்து அச்சாலை பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகி விட்டதாக புகார் அளிக்கப் பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு (பிபிடி) அந்த சாலையை சரிசெய்ய, அந்த  குழியை மூடி சரி படுத்தும் மற்றும் சாலை ஓரங்களை பலப்படுத்தும் பணிகளைத் தொடர்ந்தது.

நிலத்தடி நீர் பாய்வதால் சாலையில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் கனமழையால் நிலைமை மோசமாக இருப்பதாகவும், சாலை ஓரங்களில் அமைந்துள்ள பொது தேவைகளின் கட்டமைப்புகளும் , சாலை ஓரங்களுக்கும்   சேதம் ஏற்பட்டுள்ளது ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து பழுது பார்க்கும் பணியில் பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் Sdn Bhd (Air Selangor), தெனகா நேஷனல் பெர்ஹாட் Tenaga Nasional Berhad (TNB), யு.எம்.டபில்யு ஹோல்டிங்ஸ் UMW Holdings Bhd மற்றும் கேஸ் மலேசியா Gas Malaysia ஆகிய   ஏஜென்சிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.