ANTARABANGSA

ஜப்பான் பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 213ஆக அதிகரிப்பு- 52 பேரைக் காணவில்லை

11 ஜனவரி 2024, 7:03 AM
ஜப்பான் பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 213ஆக அதிகரிப்பு- 52 பேரைக் காணவில்லை

தோக்கியோ, ஜன 11- மத்திய ஜப்பானின் இஷிகாவா பிரதேசத்தை

உலுக்கிய நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 213 பேராக

உயர்வு கண்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி

ஷின்ஹூவா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பேரிடரில் 52 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள

வேளையில் குறைந்தது 567 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக அது

கூறியது.

சூஸூ பிராந்தியத்தில் 98 பேரும் வஜிமா பிராந்தியத்தில் 83

அனாமிஸூவில் 20 பேரும் நானோவில் ஐவரும் நாத்தோவில் நால்வரும்

ஷிகாவில் இருவரும் ஹக்குல் நகரில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

பூகம்பம் தொடர்புடைய அதாவது காயங்கள் அல்லது பேரிடர் தாக்கத்தால்

ஏற்பட்ட உளவியல் பாதிப்பு காரணமாக மேலும் எண்மர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.