ECONOMY

சிலாங்கூர் 100,000க்கும் மேற்பட்ட மாணவர்களை PTRS க்கு ஈர்க்க RM 10 மில்லியன் ஒதுக்கீடு

7 ஜனவரி 2024, 5:55 AM
சிலாங்கூர் 100,000க்கும் மேற்பட்ட மாணவர்களை PTRS க்கு ஈர்க்க RM 10 மில்லியன் ஒதுக்கீடு
சிலாங்கூர் 100,000க்கும் மேற்பட்ட மாணவர்களை PTRS க்கு ஈர்க்க RM 10 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜனவரி 7 - இந்த ஏப்ரலில் தொடங்கும் சிலாங்கூர் மாணவர்களுக்கான கல்வி பயிற்சித் திட்டத்தில் (PTRS) 130,000 படிவம்  நான்கு மற்றும் படிவம் ஐந்தாம் மாணவர்களை ஈர்க்க திட்டம் கொண்டுள்ளது.

மந்திரி புசார் சிலாங்கூர் (கட்டமைப்பு) அல்லது MBI இன் நிறுவன சமூகப் பொறுப்பு தலைவர் அஹ்மத் அஸ்ரி ஜைனால் நோர், இந்த இலவச  கல்வி பயிற்சிக்கு  RM 10 மில்லியன் ஒதுக்கீடு உள்ளதாகக் கூறினார்.

"இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடு 3  மில்லியன் அதிகரிக்கப்பட்டு  RM 10 மில்லியனாக  ஆக்கப்பட்டுள்ளது, இதனால் படிவம் 5 மாணவர்கள் மட்டுமின்றி படிவம் 4 மாணவர்களுக்கும் இது நீட்டிக்கப்பட்டுள்ளது.

“பி.டி.ஆர்.எஸ் 2024 பயிற்சிப் பட்டறை குப் பிறகு சம்பந்தப்பட்ட கல்வியாளர்கள் மற்றும் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை தெரியவரும்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, MBI க்கு PTRS க்காக கூடுதலாக RM3 மில்லியன் ஒதுக்கப்படும் என்று கூறினார், இது கடந்த ஆண்டு RM7 மில்லியனுடன் ஒப்பிடும்போது RM10 மில்லியனாகும்.

PTRS மலாய், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் சராசரி அல்லது பலவீனமான கல்வி செயல்திறன் கொண்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிரத்தியோக வகுப்புகளை வழங்குகிறது.

அத்திட்டம், 2023 ஆம் ஆண்டிற்கான 277 பள்ளிகள் மற்றும் 1,956 ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை உள்ளடக்கிய, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் கல்விக்கு வரும் மாணவர்களுக்கு மதிய உணவு ஆகியவை இந்த ஒதுக்கீட்டில் அடங்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.