புத்ராஜெயா, ஜன 2 - ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் சிக்கியதாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ சமீபத்திய அறிக்கைகள் உறுதி செய்யவில்லை என வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) தெரிவித்தது.
ஜப்பானின் மத்திய மற்றும் மேற்கு கடற்கரையைத் தாக்கிய நிலநடுக்கத்திற்குப் பிறகு தோக்கியோவில் உள்ள மலேசிய தூதரகம் வழியாக அமைச்சு அந்நாட்டின் சமீபத்திய நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
இந்த பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும், ஜப்பான் மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கும் மலேசியா ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவிக்கிறது என்று நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் விஸ்மா புத்ரா கூறியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்கும் அதேவேளையில் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் சமீபத்திய உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகளைப் பின்பற்றி நடக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அது குறிப்பிட்டது.
தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் தோக்கியோவில் உள்ள மலேசிய தூதரகத்தை +81-3-3476-3840 அல்லது +8180-3913-3840 (அவசரநிலை) மற்றும் mwtokyo@kln.gov.my அல்
ரிக்டரில் 7.6 அளவு கொண்ட இந்த நிலநடுக்கம் மேற்கு ஜப்பானின் கடலோரப் பகுதிகளை நேற்று உலுக்கியது. இதனைத் தொடர்ந்து சிறிய சுனாமி அலைகள் அதன் கரையைத் தாக்கின.


