ECONOMY

ஷா ஆலம் வாகனமில்லா தின நிகழ்வில் பங்கேற்க எம்.பி.எஸ்.ஏ. அழைப்பு

25 டிசம்பர் 2023, 5:06 PM
ஷா ஆலம் வாகனமில்லா தின நிகழ்வில் பங்கேற்க எம்.பி.எஸ்.ஏ. அழைப்பு

ஷா ஆலம், டிச 25-  ஷா ஆலம் வாகனம் இல்லா  தின நிகழ்ச்சியில் பங்கேற்க   வர்த்தக  நிறுவனங்கள் மற்றும்  அரசு சாரா அமைப்புகளுக்கு ஷா ஆலம்  மாநகர் மன்றம் அழைப்பு விடுக்கிறது.

ஒவ்வொரு மாதமும் 2வது  ஞாயிற்றுக்கிழமை  ஷா ஆலம்,  மெரடேக்கா சதுக்கத்தில் காலை 7.00 மணி முதல்  நடைபெறும் நிகழ்வில்  பல்வேறு சுவாரஸ்யமான அங்கங்கள் இடம் பெறும் என்று மாநகர் மன்றம் தனது முகநூல் பதிவில்  தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வுக்கு பதிவு செய்ய QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். மேலும் தகவலுக்கு  ரினாஜோர்டானாவை 012-235 4235 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகத்தின் மத்தியில், குறிப்பாக ஷா ஆலம் மக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக மாநகர் மன்றம் இந்நவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

வேடிக்கை சவாரி, வேடிக்கை ஓட்டம், பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் மேடை கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஜனரஞ்சக நிகழ்வுகள் இதில் இடம் பெறும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.