ANTARABANGSA

ரவாங், சமூக மண்டம் 150,000 வெள்ளி செலவில் தரம் உயர்த்தப்பட்டது

22 டிசம்பர் 2023, 4:16 AM
ரவாங், சமூக மண்டம் 150,000 வெள்ளி செலவில் தரம் உயர்த்தப்பட்டது

ஷா ஆலம், டிச 22- ரவாங், கம்போங் சுங்கை தெரெந்தாங் சமூக மண்டபத்தை 150,000 வெள்ளி செலவில் தரம் உயர்த்தும் பணி அண்மையில் முழுமையடைந்தது.

கூடைப்பந்து திடலை உள்ளடக்கிய இந்த மண்டபம் மூலம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 8,000 குடியிருப்பாளர்கள் பயன் பெற முடியும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

கூடைப்பந்து திடலை உள்ளடக்கிய இந்த மண்டபம் பூர்த்தியடைந்துள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மண்டபத்தின் புனரமைப்புக்கு 152,000 வெள்ளி மானியத்தை வழங்கிய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

 இந்த மண்டபத்தில் உள்ள அலுவலகத்தின் தரைப் பகுதியை மாற்றியது, வர்ணம் பூசியது கூரைப் பகுதியை விரிவாக்கம் செய்தது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

தொகுதியிலுள்ள அடிப்படை வசதிகள் சிறப்பானவையாக இருப்பதை உறுதிப்படுத்த  தமது தரப்பு தொடர்ந்து  சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் என்றும் அவர் சொன்னார்.

ரவாங் தொகுதியிலுள்ள சாலைகள், மண்டபங்கள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்பு பகுதிகள்  மற்றும் கிராமங்களில் உள்ள பொது சந்தைகள் தொடர்ந்து மேம்படுத்தப் படுவதை தொகுதி சேவை மையம் உறுதி செய்யும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.