ANTARABANGSA

சீனாவில் பூகம்பம்- மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை- விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியது

20 டிசம்பர் 2023, 4:08 AM
சீனாவில் பூகம்பம்- மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை- விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியது

புத்ராஜெயா, டிச 20 - சீனாவின் வடமேற்கு மாநிலங்களான கன்ஸூ

மற்றும் கிங்காயில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் மலேசியர்கள் யாரும்

பாதிக்கப்படவில்லை.

இந்த தகவலை உறுதிப்படுத்திய வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா),

ஷியான் நகரிலுள்ள மலேசிய அரச தந்திர அலுவலகம் மூலம்

அப்பகுதியின் ஆகக்கடைசி நிலவரங்களை தாங்கள் கண்காணித்து

வருவதாக கூறியது.

சீன மக்கள் குடியரசு அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் மலேசியா

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் இந்த

பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கலை

தெரிவித்துக் கொள்கிறது என விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கை

ஒன்று கூறியது.

இந்த இயற்கைப் பேரிடர் காரணமாக 4,700 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு

பல கிராமங்களில் மின்சாரம் நீர், தொலைத் தொடர்பு மற்றும்

போக்குவரத்து சேவை துண்டிக்கப்ட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில்

உள்ள மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் அதேவேளையில்

உள்ளுர் அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றி நடக்கும்படி

அது அறிவுறுத்தியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.