ரமல்லா, டிச 17- காஸா பகுதி மற்றும் மேற்குக் கரையில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,088 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இப்போரில் 54,450 பேர் காயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய ஸியோனிச ஆக்கிரமிப்பு படையின் தாக்குதல்கள் கடந்த சனிக்கிழமையுடன் 71வது நாளை எட்டியுள்ளது.
காஸா பகுதியில் பலியானவர்களின் எண்ணிக்கை 18,800 ஆகவும் மேற்குக் கரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆகவும் அதிகரித்துள்ளது என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) தெரிவித்தது.
மேலும், காஸாவில் சுமார் 51,000 பாலஸ்தீனர்களும் மேற்குக் கரையில் கிட்டத்தட்ட 3,450 பேரும் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சு கூறியது.
காஸாவில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 300 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள், 86 பத்திரிகையாளர்கள், 35 சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் 135 ஐ.நா. அமைதிப் பணியாளர்களும் அடங்குவர்.
இதற்கிடையில், காஸாவில் தடுப்பூசி விநியோகம் தீர்ந்துபோகும் அபாயம் பற்றிய எச்சரிக்கையை சுகாதார அமைச்சு மீண்டும் வெளியிட்டது. இது மக்களின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அது குறிப்பிட்டது.
இது தவிர, அகதிகளுக்கான தங்குமிடங்களில் 360,000 தொற்று நோய்களை அமைச்சு பதிவு செய்துள்ளது .ஆனால் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 11 மருத்துவமனைகள் மட்டுமே தற்போது வரையறுக்கப்பட்ட திறனுடன் இயங்குகின்றன. மேலும் வடக்கு பிராந்தியத்தில் ஒரே ஒரு


