வாஷிங்டன், டிச 15- காஸா பகுதியில் உள்ள மக்களிடையே
அவநம்பிக்கையும் குழப்பமும் நீடிப்பதாக ஐ.நா.வின் உணவு நிறுவன
அதிகாரி கூறினார்.
உணவுப் பாதுகாப்பைப் பொறுத்த வரை அங்குள்ள மக்களில் பாதிப் பேர்
பட்டினியால் கிடப்பது ஏழு நாள் போர் நிறுத்தத்தின் போது தாங்கள்
மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாக உலக உணவுத் திட்ட துணை
நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ் நியுயார்க்கில் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.
அங்கு பத்து பேரில் ஒன்பது பேர் முறையாக உணவு உட்கொள்வதில்லை
என்பதோடு அவர்களுக்கு தினமும் உணவு கிடைப்பதில்லை என்பது
வேதனையான உண்மையாகும் கார்ல் ஸ்காவை மேற்கோள் காட்டி
அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாத நிலையில்
அவர்கள் இருக்கின்றனர் என்று அவர் சொன்னார்.
அங்கு மனிதாபிமான நடவடிக்கைகள் முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளது
இந்த சூழலில் முறையான வழிகளில் உதவிகளை வழங்குவது
சாத்தியமில்லை என அவர் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் காஸா மீது தரை, வான் மற்றும்
கடல் மார்க்கத் தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு
வருகிறது.
இந்த தாக்குதல்களில் 18,787 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு
50,897 பேர் காயமடைந்துள்ளனர்.


