துனிஸ், டிச. 13: காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்த 400 பாலஸ்தீன குழந்தைகள் அல்ஜீரியா மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்படுவார்கள் என்று அல்ஜீரிய பத்திரிகைச் சேவையின் அறிக்கையை மேற்கோள் காட்டி ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
குழந்தைகள் அல்ஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மருத்துவமனைகள் மற்றும் இராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவார்கள்.
காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஆரம்ப சுகாதார வசதிகள் செயல்படவில்லை என்று ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்தில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ரிச்சர்ட் பீபர்கார்ன் செவ்வாய் அன்று கூறினார்.
அவரது கூற்றுப்படி, காசாவின் தெற்கில் 10 மற்றும் வடக்கில் ஒரே ஒரு மருத்துவமனை உட்பட 11 மருத்துவமனைகள் மட்டுமே இன்னும் செயல்படுகின்றன.
அக்டோபர் 7 ஆம் தேதிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் காஸாவில் 18,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-பெர்னாமா-ஸ்புட்னிக்


