ANTARABANGSA

காஸாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜ.நா. பொதுப் பேரவையில் வாக்களிப்பு

13 டிசம்பர் 2023, 3:47 AM
காஸாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜ.நா. பொதுப் பேரவையில் வாக்களிப்பு

வாஷிங்டன், டிச 13 - காஸாவில் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தை

அமல்படுத்த வலியுறுத்தும் நகல் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின்

(ஐ.நா.) பொதுப் பேரவை நேற்று ஏற்றுக் கொண்டது.

சுமார் 100 நாடுகளின் ஆதரவுடன் எகிப்து தாக்கல் செய்த இந்த

தீர்மானத்தைப் பாலஸ்தீனம் மீதான அவசரத் கூட்டத்தில் கலந்து கொண்ட

193 நாடுகளில் 153 நாடுகள் ஏற்றுக் கொண்டன.

அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட பத்து நாடுகள் இந்த

தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த வேளையில் இங்கிலாந்து, ஜெர்மானி,

இத்தாலி, உக்கேரன் ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்து

கொள்ளவில்லை.

போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் தவிர்த்து, காஸா பகுதியில்

சிவிலியன்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான மனிதாபிமான பாதிப்புகள்

குறித்த கவலையையும் பொதுப்பேரவை வெளிப்படுத்தியது.

அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் பாலஸ்தீன மற்றும்

இஸ்ரேலிய சிவிலியன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்துலக

மனித்தாபிமானச் சட்டங்களின் படி குறிப்பாகச் சிவிலியன்களின் பாதுகாப்பு

தொடர்பான விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் தங்களின்

கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

பிணைப்பிடிக்கப்பட்டவர்கள் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக

விடுவிக்கப்பட வேண்டும் என்பதோடு அங்கு மனிதாபிமான உதவிகள்

வழங்கப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும் என அந்த நகல்

தீர்மானித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.