ECONOMY

பாசீர் மாஸ் மாவட்டத்தில் 3,260 பேர் 9 வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம்

6 டிசம்பர் 2023, 2:28 PM
பாசீர் மாஸ் மாவட்டத்தில் 3,260 பேர் 9 வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம்

கோத்தா பாரு, டிச 6- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி பாசீர் மாஸ் மாவட்டத்தில் 989 குடும்பங்களைச் சேர்ந்த 3,260 பேர் வெள்ளத்  துயர் துடைப்பு மையங்களில் இன்னும் தங்கியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இம்மாவட்டத்தில் உள்ள ஒன்பது நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளதாக கிளந்தான் மாநில சமூக நலத் துறையின் வெள்ள பேரிடர் தகவல் செயலி கூறியது.

குவால் திங்கி தேசியப் பள்ளியில் 108 குடும்பங்களை சேர்ந்த 590 பேரும் குவால் தோ டோ தேசியப் பள்ளியில் 258 குடும்பங்களைச் சேர்ந்த 792 பேரும் குவாக் பெரியோக் தேசியப் பள்ளியில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேரும் பாரோ பியா தேசியப் பள்ளியில் 240 குடும்பங்களைச் சேர்ந்த 664 பேரும் தங்கியுள்ளதாக அது தெரிவித்தது.

மேலும், கெடாய் தஞ்சோங் தேசிய பள்ளியில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் அடைக்கலம் நாடியுள்ள வேளையில் குவோல் பெரியோக் தேசிய பள்ளியில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 256 பேரும் 23 குடும்பங்களைச் சேர்ந்த 82 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.