மாஸ்கோ, டிச 3- பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் வெடித்த அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 61 பேரை எட்டியுள்ளது என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் (சி.பி.ஜே.) அறிக்கையை மேற்கோள் காட்டி ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட 16,000 பேரில் குறைந்தது 61 பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களும் அடங்குவர் என்று சி.பி.ஜே. வெளியிட்ட முதல் கட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7 ஆம் தேதி மட்டும் 6 பத்திரிகையாளர்கள் இறந்தனர், நவம்பர் 18 ஆம் தேதி 5 பேர் கொல்லப்பட்டனர்.


