ECONOMY

சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ் சேவையை சுற்றுலாப் பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது.

24 நவம்பர் 2023, 4:00 AM
சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ்  சேவையை சுற்றுலாப் பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது.

ஷா ஆலம், 24 நவ: சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ்களை சுற்றுலாப் பகுதிகளுக்கு இலவசமாக பயன்படுத்துவது தொடர்பான முன் மொழிவுகளை மாநில அரசு பரிசீலிக்கும்.

இலவச பேருந்து வசதி நிலப் பொதுப் போக்கு வரத்து நிறுவனம் (எ.பி.எ.டி) நிர்ணயித்த பாதையில் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுகிறது என்று Mobility EXCO இங் சீ ஹான் கூறினார்.

"இருப்பினும், பாதை தொடர்பான விஷயங்களைத் தவிர, சிலாங்கூருக்கு சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை மாநில அரசு அறிந்திருக்கிறது," என்று அவர் நேற்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் 2024 மேம்பாட்டு பட்ஜெட் முன்மொழிவின் முடிவில் கூறினார்.

சிலாங்கூர் சர்வதேச வர்த்தக உச்சி மாநாடு (SIBS) மற்றும் சிலாங்கூர் விமான கண்காட்சி (SAS) ஆகியவை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டதாக மாநில  முதலீட்டுத்துறை  ஆட்சிக்குழு  உறுப்பினரான இருக்கும் இங் சீ ஹான் கூறினார்.

"அடிப்படையில், சிலாங்கூர் ஏற்கனவே தொழில் துறைகளின் எண்ணிக்கை, தொழில்துறை நிறுவனங்களைக் கொண்டிருப்பதுடன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு உறுதியான அடித்தளத்தைக் கொண்டுள்ளது, இதனால் இவை இரண்டும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும்" என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.