ANTARABANGSA

அல்-ஷிஃபா மருத்துவமனையிலிருந்து 500 நோயாளிகளை இஸ்ரேலிய இராணுவம் வெளியேற்றியது

20 நவம்பர் 2023, 3:31 AM
அல்-ஷிஃபா மருத்துவமனையிலிருந்து 500 நோயாளிகளை இஸ்ரேலிய இராணுவம் வெளியேற்றியது

காசா, நவ 20 - காஸா நகரின் மேற்கில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தாக்குதலால் காயமடைந்தவர்கள் உட்பட சுமார் 500 நோயாளிகளை இஸ்ரேலிய இராணுவம் மருத்துவமனையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி அவர்களின் தலைவிதியை  தெருக்களில் தீர்மானிக்க வைத்தது.

மிகவும் மோசமான நிலையிலுள்ள அந்நோயாளிகளுக்கு  விரிவான மருத்துவ பராமரிப்பு தேவை என்று காஸா பகுதியிலுள்ள அரசாங்கத்தின் ஊடக அலுவலகம் கடந்த சனிக்கிழமை தெரிவித்தது.

அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்தில் இருந்த அனைவருக்கும் இஸ்ரேலிய இராணுவம் ஒரு மணிநேர காலக்கெடுவை வழங்கியது, இதனால் அவசர மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளைக் கூட அந்த யருத்துவமனையை விட்டு  வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என அனடோலு ஏஜென்சி  கூறியது.

காயமடைந்தவர்கள், குறைமாத குழந்தைகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட அனைவரின் பாதுகாப்பு மற்றும் உயிருக்கு  இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளே பொறுப்பு என காஸா ஊடக அலுவலகம் தெரிவித்தது.

அனைத்துலக  மற்றும் சட்டப்பூர்வ மாதுகாப்பைக் கொண்ட மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களை கட்டமைப்பிற்குள்  பாதுகாக்கும் பொறுப்பை அலட்சியம் மற்றும் பலவீனமான தொடர் நடவடிக்கைகளால்  தவறவிட்ட சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளும் இந்த அவல நிலைக்குப் பொறுப்பு என்று ஊடக அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அவர்களின் உடல்நலம், மருத்துவம் மற்றும் மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றுவதற்கு காஸா பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் ஒரு மணி நேர காலக்கெடுவை நிர்ணயித்த பின்னர் நூற்றுக்கணக்கான நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள், பிற ஊழியர்கள் மற்றும் அங்கு அடைக்கலம் நாடியிருந்த பொதுமக்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.