அங்காரா, நவ 8 - கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் காஸா தீபகற்பம் மீது
இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,328ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 4,237 சிறார்களும் 2,719 பெண்களும் அடங்குவர் என்று
பாலஸ்தீன சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ராப் அல்-குட்ரா கூறினார்.
காஸா மீது இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்டு வரும் இடைவிடாத
தாக்குதல்கள் காரணமாக மேலும் 25,956 பேர் காயமடைந்துள்ளதாக அவர்
தெரிவித்தார்.
மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களை இஸ்ரேலின்
தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும்
அனைத்துல செஞ்சிலுவைச் சங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் படைகள் எல்லை தாண்டி
மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து காஸா தீபகற்பம் மீது இஸ்ரேல்
வான் மற்றும் தரை வழித்தாக்குதல்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு
வருகிறது.
இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக அந்த பகுதியில் உள்ள 23 லட்சம் பேர்
கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர். இந்த
தாக்குதல்களால் பெரிய அளவிலான உயிருடச் சேதமும் ஏற்பட்டுள்ளது.


