ECONOMY

வெள்ளை அரிசி  கடத்தல் தடுப்பு நடவடிக்கை,  தொடர்கிறது

4 நவம்பர் 2023, 2:02 AM
வெள்ளை அரிசி  கடத்தல் தடுப்பு நடவடிக்கை,  தொடர்கிறது

கோலாலம்பூர், 4 நவ: அக்டோபர் தொடக்கத்தில் இருந்து செயல்படுத்தப் பட்ட ஒருங்கிணைந்த உள்ளூர் வெள்ளை அரிசி கடத்தல் தடுப்பு அமலாக்க நடவடிக்கை (OP BPT) மூலம் பணிக்குழுவின் அமலாக்க நடவடிக்கைகளை நவம்பர் 17 வரை நீட்டிக்க உள்ளதாக வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்பு துணை அமைச்சர் சான் ஃபூங் ஹின் தெரிவித்தார்.

அண்டை நாடுகளுக்கு  எடுத்து செல்லப்பட்ட வெள்ளை அரிசி (பிபிஐ) கடத்தல் விவகாரத்தை தொடர்ந்து சபா மற்றும் சரவாக்கில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கால நீட்டிப்பு என்று அவர் கூறினார்.

மெனரா லெம்பகா பெர்துபுஹான் பெலடங்கில் (எல்பிபி) நேற்று நடைபெற்ற 5வது எண் 5 OP BPT பணிக்குழு வாராந்திர கூட்டத்தில் இந்த விஷயம் ஒப்புக் கொள்ளப் பட்டதாக சான் கூறினார்.

"இந்த கால நீட்டிப்பு மூலம், சபா மற்றும் சரவாக் எல்லை நுழைவாயில்களில் ஒருங்கிணைந்த அமலாக்கம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், மேலும் மானியங்கள் கசிவு மற்றும் தேசிய உதவித்தொகையை வீணாக்கும் கடத்தலை தடுக்க இந்த பணிக்குழு மூலம் மேலும் கடுமையாக பாடுபடும்" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், OP BPT பணிக்குழுவின் தலைவரான சான், நவம்பர் 1ஆம் தேதி வரை, தீபகற்ப  மலேசியாவில்  71 தொழிற்சாலைகள், 113 மொத்த விற்பனையாளர்கள் மற்றும் 12 சில்லறை விற்பனையாளர்கள் சம்பந்தப்பட்ட 196 வளாக ஆய்வுகளை சம்பந்தப்பட்ட அமலாக்க அமைப்புகள் நடத்தியதாக கூறினார்.

நெல் மற்றும் அரிசி கட்டுப்பாடு சட்டம் 1994 இன் கீழ் இதுவரை மூன்று வழக்குகளும், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் (KPDN) கீழ் ஒன்பது வழக்குகளும் விசாரிக்கப்படுகின்றன என்றார்.

அரிசி விநியோக பிரச்சினைகள் தொடர்பான புகார்கள் அல்லது தகவல் உள்ளவர்கள், 03-8870 2393/2207 என்ற புகாரின் ஹாட்லைன் மூலம் அவற்றைத் தெரிவிக்கலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.