காசா சிட்டி (பாலஸ்தீனம்), அக் 30 - அக்டோபர் 7 முதல் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களால் 47 மசூதிகள் அழிக்கப் பட்டு மூன்று தேவாலயங்கள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அரசாங்க ஊடக அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
"காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்கள் 47 மசூதிகளை அழித்தன மற்றும் 80 அரசாங்க கட்டிடங்கள் தவிர மூன்று தேவாலயங்கள் மற்றும் 203 பள்ளிகளைச் சேதப் படுத்தியுள்ளன" என்று அனடோலு ஏஜென்சி அலுவலகத்தின் இயக்குனர் சலாமா மரூஃப் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அக்டோபர் 7 முதல் காசா மீது இஸ்ரேலிய நடத்திய குண்டு வீச்சினால் 8,005க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவின் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்களும் இஸ்ரேல் அவர்களில் வசிப்பிடத்தை முற்றுகையிட்டதால் உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் மருந்து பற்றாக்குறையால் போராடி வருகின்றனர். கடந்த வார இறுதியில் ரஃபா கிராசிங் பாயின்ட் திறக்கப் பட்டதில் இருந்து சில உதவி டிரக்குகள் மட்டுமே காசாவுக்குள் வந்துள்ளன.
- பெர்னாமா-அனடோலு ஏஜென்சி


