ANTARABANGSA

உலகளவில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 114 மில்லியனைத் தாண்டியுள்ளது

26 அக்டோபர் 2023, 7:00 AM
உலகளவில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 114 மில்லியனைத் தாண்டியுள்ளது

ஜெனீவா, அக் 26: இந்த ஆண்டு செப்டம்பர் நிலவரப்படி, உலகளவில் போர், துன்புறுத்தல், வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 114 மில்லியனைத் தாண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

, வன்முறை, வறட்சி, வெள்ளம் மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகள் உட்பட கட்டாய இடப்பெயர்வின் முக்கிய காரணங்களாகும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) தெரிவித்துள்ளது.

"உலகெங்கிலும் அதிகமான மோதல்கள் பரவலாகி வருகின்றன, அவை அப்பாவி உயிர்களைப் பறித்துள்ளன.

"சர்வதேச சமூகம், மோதலைத் தீர்ப்பதில் அல்லது புதிய மோதல்களைத் தடுப்பதில் தோல்வியடைந்தது. அதன் விளைவாக மேலும் அதிகமான மக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

"தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று UNHCR உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி கூறினார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இப்போது 75 சதவீத அகதிகள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படுபவர்கள் உள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.6 மில்லியன் புதிய விண்ணப்பங்கள் புகலிடம் கோரி வந்துள்ளதாக UNHCR கூறியது. இது இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.

இரண்டாவது உலகளாவிய அகதிகள் மன்றம் இந்த ஆண்டு டிசம்பர் 13 முதல் 15 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும்.

-பெர்னாமா-சின்ஹுவா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.