ECONOMY

கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் குருகுலம் மற்றும் கீத்தா சூரியன் ஆசிரமத்தின் முன்னாள் மாணவர் ச. கிருஷ்ணின் - நன்றி

26 அக்டோபர் 2023, 12:45 AM
கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் குருகுலம் மற்றும் கீத்தா சூரியன் ஆசிரமத்தின் முன்னாள் மாணவர் ச. கிருஷ்ணின் - நன்றி

கெர்லிங் 26 அக்- கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் குருகுலம் மற்றும் மைகீத்தா சூரியன் ஆசிரமத்தின் முன்னாள் மாணவராகிய ச. கிருஷ்ணன் சரவாக் மாநிலத்தின் மீரியில் இயங்கிவரும் ஓர் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் வேலை கிடைக்கப் பெற்று  தனது பணிகளை தொடங்கவுள்ளார்.

இவர் அந்த குருகுலத்தின் முதல் தொகுதி (2016) மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்திற்கு மாணவன் ச.கிருஷ்ணனின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த பள்ளி தலைமையாசிரியர் திரு. சி. குமார், பெற்றோராகிய அம்மா திருமதி. சித்ரா அவர்களுக்கும், இந்த வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சகோதரர் அருண் சரவணன் அவர்களுக்கும் மற்றும் அவரை போன்ற மாணவர்களுக்கு ஆதரவுகரம் நீட்டி வரும் நல்லுள்ளங்கள், நன்கொடையாளர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்  முன்னாள்  மாணவர் ச.கிருஷ்ணன்.

கடந்த எட்டு ஆண்டு கால இடைவிடாத எங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த முதல் வெற்றி இதுவே ஆகும். இறுதியாக, மாணவன் ச. கிருஷ்ணன் தனது இலக்கை நோக்கி மேன் மேலும் முன்னேற மைகீத்தா சூரியன் ஆசிரமம், கெர்லிங் தோட்டப் தமிழ்ப்பள்ளி நிர்வாகம், பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் தங்கள் வாழ்த்துக்களை  அம்மாணவருக்கு தெரிவித்துக்கொண்டனர்.

உண்மை சில பயிர்கள் குறுகிய காலத்தில் பயனளிக்க தொடங்கிவிடும்,  ஆனால் மாணவர்களை கை பிடித்து  கரை சேர்ப்பது என்பது  நீண்டப் போராட்டம், கடுமையான  உழைப்பும் , அர்ப்பணிப்பும் தேவை. ஆனால் அந்த வெற்றி  மிக அர்த்த மிக்கதாக  மலரவேண்டும். வளர்ந்தால்

வரலாறு,.

 இன்னும் பல மலர்களை  கெர்லிங் குருகுல கல்வி மையம் உருவாக்க, அதன் சேவை சிறப்பாக  மலர வேண்டி சிலாங்கூர் கினியும்  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.