இறந்தவர்களில் 2,055 சிறார்கள், 1,119 பெண்கள் மற்றும் 217 முதியவர்களும் அடங்குவர் என்று காசா நகரில் செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ராப் அல்-குத்ரா தெரிவித்ததார்.
இஸ்ரேலின் இந்த கோரத் தாக்குதலில் இதுவரை 15,273 பேர் காயமடைந்துள்ளதாக அஷாராப்பை மேற்கோள் காட்டி அனாடோலு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நிகழ்த்திய 23 படுகொலை தாக்குதல்களில் 182 சிறுவர்கள் உட்பட 436 பேர் கொல்லப்பட்டனர் என்று அஷ்ராப் தெரிவித்தார் .
மேலும், 830 சிறார்கள் உட்பட 1,500 பேர் இன்னும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகச் சுகாதார அமைச்சுக்கு இதுவரை தகவல் கிடைத்துள்ளது.
கடந்த அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய குண்டு வீச்சு மற்றும் முற்றுகைக்கு இலக்காகியிருக்கும் காஸாவில் மருத்துவ பொருட்கள், எரிபொருள், சுத்தமான தண்ணீர், உணவு உட்பட பிற அடிப்படைத் தேவைகளுக்குக் கடுமையானப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


