கோலாலம்பூர், அக் 23: பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலைத் தொடர்ந்து அந்நாட்டு எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவிய போதிலும் லெபனானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மல்பட் 850-10 குழு பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மல்பாட் 850-10 படையின் பணி தற்போது வழக்கம் போல் நடைபெற்று வருவதாக மலேசிய ஆயுதப் படைகளின் (ஏடிஎம்) தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ முகமது அப் ரஹ்மான் தெரிவித்தார்.
"அங்கு (லெபனான்) நிலைமை சற்று பதட்டமாக இருந்தாலும், அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர், ஆரோக்கியமாக உள்ளனர்" என்று அவர் கூறினார்.
லெபனானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மல்பாட் 850-10 குழுவின் பாதுகாப்பு நிலை குறித்து கருத்து கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா குழுவை உள்ளடக்கிய சண்டை பலஸ்தீன-இஸ்ரேல் மோதலின் பின்னணியில் தீவிரமடைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
- பெர்னாமா


