எஞ்சிய 22 சதவீதம் பேர் நிதியைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர் கொள்வதாகக் கண்டறியப் பட்டதாக தொழில்முனைவோர் ஆட்சிகுழு உறுப்பினர்
முகமட் நஜ்வான் ஹலிமி கூறினார், ஆனால் அவர்கள் கடனை திரும்ப செலுத்த வற்புறுத்தப் படுவதில்லை. மாநில அரசு அவர்களிடம் வற்புறுத்தி நிதியை திரும்பப் பெறவில்லை.மாறாக, அவர்கள் பணம் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது, வசூல் செயல்முறையை மேம்படுத்துவதுடன் வட்டி முறையைக் குறைப்பது போன்ற மாற்று அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி விளக்கினார்.
“தொழில்முனைவோர் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமம் இருப்பதாக (எழுத்துபூர்வமான கோரிக்கைகளை) நாங்கள் பெற்றுள்ளோம் என்பது உண்மைதான்.
அப்படிப்பட்டவர்களின் சூழ்நிலைகளை ஆராய்ந்து அவர்களுக்கு கருணைகாட்டுவதும், விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து நிதியை சரியான நேரத்தில் கட்டி முடிக்குமாறு மாநில அரசு அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளதாக, அவர் கூறினார்.
இன்று ஹோட்டல் ஜெனோவில் நடந்த ஒரு விழாவில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முகமட் நஜ்வான், நிதியை திருப்பிச் செலுத்துவதற்கான அறிவிப்பைப் பெற்ற எந்தவொரு கடனாளியும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப் படுவதாக கூறினார்.
"மாநில அரசாங்கத்தின் தரப்பில், நாங்கள் நியாயமான அணுகுமுறையை எடுத்துக் கொள்கிறோம், ஆனால் (கட்டணம்) வசூலிக்காமல் இருப்பது மிகவும் கடினம், ஏனெனில் இது மாநில அரசின் நிதி மற்றும் மக்களையும் உள்ளடக்கியது.
தொழில்முனைவோருக்கு நிதி நிறுவனம் வழங்கும் திட்டங்களில் ஜீரோ டு ஹீரோ, நயாகா தாருல் எஹ்சன் (நாடிஐ), கோ டிஜிட்டல், ஐ-லெஸ்டாரி, ஐ-அக்ரோ, ஐ-பெர்முசிம் மற்றும் ஐ-பிஸ்னெஸ் ஆகியவை அடங்கும்.
கோவிட்-19க்குப் பிறகு பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு உதவ, ஜனவரி 1 முதல் டிசம்பர் 18 வரை பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் வெற்றி பெறுதல் பிரச்சாரத்துடன் தொடர்ந்து திறந்திருக்கும் நிதி மீட்புத் திட்டத்தை நிறுவனம் வழங்குகிறது.


