ANTARABANGSA

 50,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிப்படை சுகாதார சேவைகள் கிடைக்கவில்லை

17 அக்டோபர் 2023, 2:32 AM
 50,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிப்படை சுகாதார சேவைகள் கிடைக்கவில்லை

காசா, அக்.17: காஸா பகுதியில் உள்ள 50,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிப்படை சுகாதார சேவைகள் கிடைக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படும் சுமார் 5,500 கர்ப்பிணித் தாய்மார்கள் சுகாதார கட்டமைப்பை அணுகுவதில் சிரமப்படுகின்றனர் என்று ஐ.நா. தெரிவித்தது.

காசாவில் சுகாதார கட்டமைப்பு இப்போது அழிவின் விளிம்பில் உள்ளது என்று பாலஸ்தீனத்திற்கான ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் பிரதிநிதி டொமினிக் ஆலன் தெரிவித்தார்.

"உடைகள், சுகாதாரம், ஆதரவு மற்றும் அவர்களின் உடல்நிலை மற்றும் பிறக்காதக் குழந்தை பற்றி எந்த உறுதியும் இல்லாமல், பிரசவத்தின் இறுதி கட்டத்தில் அவர்கள் படும் சிரமங்களை கற்பனை செய்து பாருங்கள்" என்று ஆலன் கூறியதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

ஆபத்தான நிலைமைகள் காரணமாக மகப்பேறு வார்டுக்குக் கடமைக்காக வர முடியாத மருத்துவர்கள் இருப்பதாக ஆலன் கூறினார்.

அப்பகுதியில் உதவி மற்றும் மனிதாபிமான பொருட்களை அணுகுவதற்கு வசதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

காசா பகுதியில் நிலைமை மோசமடைந்து வருகிறது. மக்கள் மீது கடுமையான மற்றும் மனிதாபிமானமற்ற கட்டுப்பாடுகளை இஸ்ரேல் விதித்துள்ளது, மேலும் மக்களை தெற்கே செல்ல கட்டாயப்படுத்த முயற்சிக்கிறது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.