ஷா ஆலம், அக் 13- சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எல்.ஆர்.ஏ.) மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இன்று காலை 6.00 மணிக்கு நீர் விநியோகம் முழுமையாகச் சீரடைந்தது.
தண்ணீர் முழுவதுமாக சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய தங்கள் வீடுகளில் உள்ள குழாய்களை ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை திறந்து விடுமாறு பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் பயனீட்டாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடையின் போது பயனீட்டாளர்கள் காட்டிய பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்காக ஆயர் சிலாங்கூர் நன்றி தெரிவிக்க விரும்புகிறது என்று அது தனது முகநூல் மூலம் தெரிவித்தது.
சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு மையத்தில் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு பணிகளை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது. இதனால் பெட்டாலிங், கோலாலம்பூர் மற்றும் உலு லங்காட்டில் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.


