ஷா ஆலம், அக் 12: மேற்குக் கரையில் நெருக்கடியான பகுதியில் சிக்கித் தவிக்கும் ஐந்து மலேசியர்களை அழைத்து வர அரசாங்கம் வெளியேற்றும் (பரிமாற்றம்) செயல் முறையை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை பாலஸ்தீனத்தில் இருக்கும் மலேசிய மருத்துவரை விஸ்மா புத்ரா தொடர்பு கொள்ள முடிந்தது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.
"மலேசியர்கள் சேமமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் அவர்களையும் சில இந்தோனேசியர்களையும் அழைத்து வர பிலிப்பைன்ஸ் தூதரகத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்," என்று அவர் கூறினார்.
இன்று டேவான் ராக்யாட்டில் அமர்வில் போது துவான் தான் ஹோங் பின் (பக்காத்தான் ஹராப்பான்-பக்ரி) என்பவரின் கூடுதல் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன இடையில் சண்டை நீடித்து வரும் நிலையில், மேற்குக் கரைக்குச் செல்லும் திட்டத்தை மலேசியர்கள் ஒத்திவைக்குமாறு விஸ்மா புத்ரா அறிவுறுத்தி உள்ளது.
பாலஸ்தீனியச் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 1,100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 5,339 பேர் காயமடைந்துள்ளனர்.


