ஷா ஆலம், அக் 11- வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வசதியையும் உகந்த சூழலையும் ஏற்படுத்தும் நோக்கில் ரவாங், பண்டார் கன்றி ஹோம்ஸ் மார்க்கெட் தரம் உயர்த்தப்படவுள்ளது.
அந்த இருபது ஆண்டு பழைமை வாய்ந்த மார்க்கெட்டை தரம் உயர்த்தும் திட்டத்தில் கூரையை மாற்றுவது மற்றும் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் வர்ணம் பூசுவது ஆகிய பணிகளும் உள்ளடங்கியுள்ளதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.
இவை தவிர, பொது கழிப்பறைகளை மேம்படுத்துவது, வாகன நிறுத்துடத்தை சீரமைப்பது மற்றும் வேலிகளை அமைப்பது ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இந்த மார்க்கெட் நிர்மாணிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகி விட்டதால் அதில் ஏற்பட்டுள்ள பழுதைச் செய்து புதிய தோற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. என்று சிலாங்கூர்கினியிடம் அவர் சொன்னார்.
இந்த சீரமைப்புப் பணிகள் இம்மாதம் தொடங்கி மூன்று மாத காலத்தில் முற்றுப் பெறும். இதன் மூலம் மார்க்கெட்டிற்கு வரும் வாடிக்கையாளர்கள் சிறப்பான வசதிகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.


