ECONOMY

30 இந்திய பெண்களுக்குக்  கொண்டைமாலை பயிற்சி

9 அக்டோபர் 2023, 2:59 AM
30 இந்திய பெண்களுக்குக்  கொண்டைமாலை பயிற்சி

செய்தி ; சு. சுப்பையா

கெப்போங்.அக்.8- புக்கிட் லஞ்சான் சட்ட மன்றத்தை சேர்ந்த 30 இந்திய பெண்களுக்கு ஒரு நாள் கொண்டைமாலை பயிற்சி சிறப்பாக நடை பெற்றது. இத்தொகுதியின் இந்திய கிராமத் தலைவர் லோகநாதன் தெய்வநாயகம் இப்பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

இப்பயிற்சி நமது இந்திய பெண்களுக்கு ஒரு பகுதி நேர வருவாய் ஈட்டித்தரும் சொந்த கைத்தொழிலாக விளங்குகிறது. இந்த பயிற்சியை ஏற்பாடு செய்த லோகநாதனை  புக்கிட் லஞ்சான் சட்ட மன்ற உறுப்பினர்  புவா பெய் லிங் பாராட்டினார்.

புக்கிட் லஞ்சான் சட்ட மன்ற உறுப்பினர் புவா பெய் லிங் 2 மணி நேரத்தை பங்கேற்பாளர்களுடன் செலவு செய்தார். எதிர் காலத்தில்  இப்படி பட்ட பயிற்சிகளில் அதிகமானவர்கள் கலந்துக் கொள்ள ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

மகாஸ் அழகு நிலையத்தின் உரிமையாளர் இப்பயிற்சியை முழுமையாக வழி நடத்தினார்.  காலை 8.30 மணிக்கு தொடங்கிய இப்பயிற்சி நண்பகல் 2.00 மணி வரை நடைபெற்றது. கொண்டை மாலை 3 விதத்தில் கட்டலாம் என்று பயிற்சியாளர் கூறினார். .

புக்கிட் லஞ்சான் சட்ட மன்ற தொகுதியில் உள்ள 30 இந்திய பெண்கள் இப்பயிற்சியில் கலந்துக் கொண்டனர். அனைவரும் மிகவும் ஆர்வமுடன் பங்கெடுத்துக் கொண்டனர். இதில் தனித்து வாழும் தாய் மார்களும் அடங்குவர். இப்பயிற்சிக்கு பின்னர் தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டு சொந்த தொழில் செய்வோம் என்று சிலர் கூறினர்.

இதில் ஒரு சிலர் இதற்கு முன்பே சாலை ஓரங்களில் பூக்கடை வியாபாரம் செய்து வருகின்றனர்.  இப்பயிற்சி நல்ல பலனை கொண்டு வரும் என்று தாம் எதிர்பார்ப்பதாக லோகநாதன் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.