NATIONAL

இரண்டு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன

6 அக்டோபர் 2023, 3:37 AM
இரண்டு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள்  பதிவாகியுள்ளன

கோலாலம்பூர், அக் 6 –இன்று காலை 9 மணி நிலவரப்படி நாட்டில் உள்ள இரண்டு

பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன.

நெகிரி செம்பிலானில் உள்ள நீலாயில் காற்று மாசுக் குறியீடு (API) அளவீடு 151 ஆகவும்,

புக்கிட் ரெம்பாய், மலாக்காவில் 112 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல்

துறையின் ஏபிஐ மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

0 முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100 மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும் ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300 மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.

சமீபத்திய காற்று மாசுக் குறியீட்டின் (API) அளவீட்டின் நிலையை அறிய மக்கள் APIMS இணையதளத்தைப் பார்வையிடலாம். கடந்த மே மாதம், வானிலை மற்றும் காலநிலை அதிகாரிகள், இந்த ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் தெற்கு

ஆசியான் பிராந்தியத்தில் மிகவும் கடுமையான புகை மூட்டம் நிகழும் என எச்சரித்தனர்.

 

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.