NATIONAL

அடுத்த மாதத் மத்தியில் சிலாங்கூர் பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்படவுள்ளது - டத்தோ மந்திரி புசார்

4 அக்டோபர் 2023, 12:55 PM
அடுத்த மாதத் மத்தியில் சிலாங்கூர் பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்படவுள்ளது - டத்தோ மந்திரி புசார்

ஷா ஆலாம், அக் 4: அடுத்த மாதத் மத்தியில் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில் சிலாங்கூர் பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்பட உள்ளது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாகச் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜின் ஒப்புதலுக்காக மாநில நிர்வாகம் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

"நவம்பர் மாதத் மத்தியில் நாங்கள் பட்ஜெட்  மற்றும் மாநிலச் சட்டசபையை  கூட்டத்தொடரையும்  நடத்துவோம். தேதி  குறித்த சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் அவர்களின் ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்த ஆண்டு மாநில வரவுசெலவுத் திட்டத்திற்கு, RM1.25 பில்லியன் மேலாண்மை செலவினங்களை உள்ளடக்கிய மொத்தம் RM2.45 பில்லியனுக்கான தொகை  சமர்பிக்கவுள்ளதாக  கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அக்டோபர் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.