NATIONAL

கெடாவில் 67 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்

2 அக்டோபர் 2023, 3:42 AM
கெடாவில் 67 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்

அலோர் ஸ்டார், அக். 2: இன்று காலை 8 மணி நிலவரப்படி, கெடாவில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் இன்னும் இரண்டு தற்காலிகத் தங்கும் மையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன என்று மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் (APM) பேரிடர் மேலாண்மை செயலகத்தின் தலைவர் மேஜர் கெடா (PA) முஹமட் சுஹைமி முகமட் ஜைன் தெரிவித்தார்.

"தாமான் அமான் தேசியப் பள்ளியில் 22 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 63 பேர் தங்கி உள்ளனர். அதே நேரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஶ்ரீ குனோங் தேசியப் பள்ளியில் தஞ்சம் புகுந்துள்ளனர்" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இன்று வானிலை சீராகி, தண்ணீர் முழுவதுமாக வடிந்தால் இன்னும் தற்காலிகத் தங்கும் மையங்களில் இருக்கும் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பலாம் என்றார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.