NATIONAL

இரண்டு வயது சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்

2 அக்டோபர் 2023, 3:42 AM
இரண்டு வயது சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்

டுங்குன், அக்.2: புக்கிட் பெசியில் உள்ள மீன்பிடி குளத்திற்குப் பெற்றோரைப் பின் தொடர்ந்து சென்ற இரண்டு வயது சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் மாலை 5.15 அளவில் நடந்துள்ளது. அச்சிறுமிக்கு இரவு 8 மணியளவில் டுங்குன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட போது உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும், மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன் சிறுமியின் தந்தை சுவாச உதவி அளித்தார்.

இதற்கிடையில், டங்கன் மாவட்ட காவல்துறைத் தலைவர், செயல் கண்காணிப்பாளர் மைசூரா அப்துல் காதிரைத் தொடர்பு கொண்டபோது, சம்பவம் குறித்து புகார் பெற்றதை உறுதிப்படுத்தினார்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க குழந்தைகளின் நடவடிக்கைகள் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.