MEDIA STATEMENT

பள்ளிகளில் விபத்துகளைத் தவிர்க்க விளையாட்டு வசதிகளை பராமரிப்பதற்கான வழிகாட்டி.

1 அக்டோபர் 2023, 4:00 AM
பள்ளிகளில் விபத்துகளைத் தவிர்க்க விளையாட்டு வசதிகளை பராமரிப்பதற்கான வழிகாட்டி.

கோலாலம்பூர், 30 செப். : பள்ளி மைதானங்கள் விபத்தின்றி இருப்பதை உறுதி செய்வதற்காக பள்ளிகளில் விளையாட்டு வசதிகளை பராமரிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை வழிகாட்டி (எஸ்ஓபி) அதிகரிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.

மாநிலக் கல்வித் துறை (ஜேபிஎன்), மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகள் முழு விளையாட்டு உள் கட்டமைப்பையும் கண்காணிக்கும் மற்றும் பள்ளி மைதானம் மாணவர்கள் பயன்படுத்த பாதுகாப்பான நிலையில் இருப்பதையும் கல்வி அமைச்சு (கேபிஎம்) உறுதி செய்யும் என்றார்.

" மாணவர்கள் புறப்பாட நிகழ்வுகளில் ஈடுபடும் போது விழிப்புடன் இருக்குமாறு பள்ளி நிர்வாகிகள்  எப்போதும் நினைவூட்ட வேண்டும்" என்று அவர் இன்று தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் சென், அந்தோணி தேசியப் பள்ளியில் தனது வகுப்புத் தோழர்களுடன் புறப்பாட செயல்பாட்டின் போது சேதமடைந்த உலோகத்தாலான கோல் கம்பத்தால்   11 வயது மாணவிக்கு மரணம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாணவியின் குடும்பத்திற்கு ஃபத்லினா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

"ஜேபிஎன் மூலம் MoE பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு  உதவி செய்யும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்," என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ, மலேசிய காவல்துறைக்கு MoE ஒத்துழைக்கும் என்றும்  ஃபத்லினா கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.