NATIONAL

விவசாயக் கணக்கெடுப்பு வெற்றிகரமாக்க விவசாயத் தொழில் முனைவோர் ஒத்துழைப்பு அவசியம்

29 செப்டெம்பர் 2023, 8:17 AM
விவசாயக் கணக்கெடுப்பு வெற்றிகரமாக்க விவசாயத் தொழில் முனைவோர் ஒத்துழைப்பு அவசியம்

ஷா ஆலம், செப் 29: விவசாயத் தொழில் முனைவோர் 2024-ஆம் ஆண்டுக்கான விவசாய கணக்கெடுப்பு வெற்றிகரமாக்குவதற்கு மலேசிய புள்ளியியல் துறைக்கு (DOSM) முழு ஒத்துழைப்பை வழங்குமாறு மாநில அரசு கேட்டுக்கொள்கிறது.

"இந்த புள்ளிவிவர கணக்கெடுப்பு கடந்த 2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இது நாட்டின் மூன்றாவது விவசாய புள்ளிவிவரக் கணக்கெடுப்பு ஆகும். அதுமட்டுமில்லாமல், இது நீண்ட காலமாக செய்யப்படவில்லை என விவசாயத் துறை பொறுப்பு உறுப்பினர் இஷாம் அசிம் கூறினார்.

"எனவே, இந்த புள்ளிவிவர கணக்கெடுப்பை செயல்படுத்துவதன் மூலம் புதுப்பித்த மற்றும் முழுமையான விவசாய விவரத்தை தயாரிப்பது மிகவும் பொருத்தமானது" என்று அவர் இன்று சிலாங்கூர் 2024 விவசாயக் கணக்கெடுப்பு தீர்வு அமர்வில் கூறினார்.

பிகேபிஎஸ்யில் இல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவசாய முகமைகளைச் சேர்ந்த 41 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநில DOSM இயக்குனர் ஹர்தினி யாக்கோப்பும் உடனிருந்தார்.

விவசாயக் கணக்கெடுப்பில் சிலாங்கூரில் உள்ள பல்வேறு விவசாயத் துறைகளைச் சேர்ந்த 60,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 200 கணக்கெடுப்பாளர்களால் நடத்தப்படும் என்று இஷாம் மேலும் கூறினார்.

விவசாயம் மீதான புள்ளிவிவர செயல்முறை அடுத்த ஜூலையில் தொடங்கும் மற்றும் முடிவடைய மூன்று மாதக் காலங்கள் ஆகும். "அது செப்டம்பர் 2024 இல் இது முடிவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.