NATIONAL

தொப்புள் கொடியுடன் பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது

29 செப்டெம்பர் 2023, 4:42 AM
தொப்புள் கொடியுடன் பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது

ஜார்ஜ்டவுன், செப் 29: நேற்று ஃபர்லிமி அடுக்குமாடி வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அங்கு வேலை செய்து கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்கள் குழு காலை 10 மணியளவில் ஆடையின்றி அச்சிசுவின் உடலைக் கண்டெடுத்தனர். பின்னர் அவர்கள் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையில் புகார் அளித்தனர்.

வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சோஃபியன் சாண்தோங்கைத் தொடர்பு கொண்டபோது, குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். மேலும் வழக்கு தொடர்பான மேல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

"இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ எங்களை தொடர்பு கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.

குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், குற்றவியல் சட்டத்தின் 318 வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.