ANTARABANGSA

சிப்பாங் நகராண்மைக் கழகம் அடுத்த ஆண்டு அதன் மேம்பாட்டிற்கு RM249.8 மில்லியன் ஒதுக்கியுள்ளது

27 செப்டெம்பர் 2023, 8:26 AM
சிப்பாங் நகராண்மைக் கழகம் அடுத்த ஆண்டு  அதன் மேம்பாட்டிற்கு  RM249.8 மில்லியன் ஒதுக்கியுள்ளது

சிப்பாங், செப் 27: சிப்பாங் நகராண்மை கழகம்,  நகர சீரமைப்பு  மற்றும் மேம்பாட்டிற்கு அடுத்த ஆண்டு RM249.8 மில்லியனை அங்கீகரித்துள்ளது.

பொருளாதார மீட்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் மாநில அரசின் முடிவின்படி இந்தத் தொகை வழங்கப்படுவதாக யாங் டிபெர்துவான் டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன் விளக்கினார்.

சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் உத்திகள் முழுமையாக செயல்படுத்தப் படுவதை உறுதி செய்வதில் 2022 மற்றும் 2023 இன் முதல் பாதியில் எட்டப்பட்ட செயல் திறனையும் பட்ஜெட் கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்றார்.

"வளர்ச்சி மற்றும் மேலாண்மை திட்டங்களுக்காக RM249.8 மில்லியன் தொகையை சிப்பாங் நகராண்மை கழகம் ஒதுக்கியுள்ளது. இதன் வருவாய் RM202 மில்லியன் ஆகும்".

வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதில் ஏழு முக்கிய உத்திகளை  தனது தரப்பு கவனத்தில்  எடுத்துக் கொண்டதாக  இன்று நடைபெற்ற முழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி அப்துட் ஹமீட் கூறினார்.

புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வருவாயைச் சேர்ப்பதன் மூலம் வருமான ஆதாரங்கள் பன்முகப்படுத்துவது, நகரத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதுடன் விவேகமான செலவினங்களைத் தொடர்வது ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் விளக்கினார்.

"தகவல் தொழில்நுட்பத் தொடர்பு மேம்படுத்துதல், சமூகம் மற்றும் நலத்திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் பசுமைத் தொழில்நுட்ப கண்டு பிடிப்புகளை அதிகரிப்பதன் மூலம் வாடிக்கையாளர் அணுகல் அதிகரிக்கிறோம்" என்று அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.