NATIONAL

நவம்பர் 4 ஆம் தேதி ஜெபாக் தொகுதி இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

25 செப்டெம்பர் 2023, 7:15 AM
நவம்பர் 4 ஆம் தேதி ஜெபாக் தொகுதி இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புத்ராஜெயா, செப் 25 - சரவாக் மாநிலத்தின்

ஜெபாக் சட்டமன்றத் தொகுதிக்கான

இடைத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் 4 ஆம் தேதி

நடைபெற தேர்தல் ஆணையம் தேதி

நிர்ணயித்துள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் மற்றும்

இடைத்தேர்தலுக்கான முதல்கட்ட

வாக்களிப்பு முறையே அக்டோபர் 21 மற்றும்

அக்டோபர் 31ஆம் தேதிகளில் நடைபெறும்

என தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர்

டாக்டர் அஸ்மி ஷரோம் கூறினார்.

இடைத்தேர்தல் தொடர்பான முக்கியத்

தேதிகளை நிர்ணயிப்பதற்காக இங்குள்ள

மெனாரா எஸ்.பி.ஆர். தலைமையகத்தில்

இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்குத்

தலைமை தாங்கிய பின்னர் நடைபெற்ற

செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்

தெரிவித்தார்.

ஜெபாக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ

தாலிப் ஜூல்பிலிப் கடந்த செப்டம்பர் 15ஆம்

தேதி காலமானதைத் தொடர்ந்து அந்த

தொகுதியில் இடைத் தேர்தல்

நடைபெறுகிறது.

72 வயதான தாலிப் சிறுநீரக நோய்

காரணமாகச் செப்டம்பர் 14 ஆம் தேதி மாலை

5.50 மணியளவில் மருத்துவ மையம் ஒன்றில்

உயிரிழந்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.