ஜெர்டிஹ், செப்.24: பெங்கலான் நங்கா, கோலா பெசூட் அணைக்கு அருகில் உள்ள சுங்கை பெசுட்டில் இறால் பிடிக்க சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர் நேற்று காலை நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
ஹுசின் ஜூசோவின் (46) சடலம் 7.45 மணியளவில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் நீரில் மூழ்கிய இடத்தில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக பெசுட் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது என பெசுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிட்டன் அப்துல் ரோசாக் முஹம்மட் கூறினார்.
"காலை 9 மணிக்குத் தேடுதல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) நடவடிக்கை நிறுத்தப்பட்டது மற்றும் காவல்துறை எஸ்டிஆர் (திடீர் மரணம்) விசாரணை அறிக்கையைத் திறந்தது. தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
– பெர்னாமா


