NATIONAL

ஈரானுடனான உறவுகளை மேம்படுத்த மலேசியா நடவடிக்கை

21 செப்டெம்பர் 2023, 6:32 AM
ஈரானுடனான உறவுகளை மேம்படுத்த மலேசியா நடவடிக்கை

கோலாலம்பூர், செப்.21- பரஸ்பர நலன்களுக்காக ஈரானுடன் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை  மலேசியா வலுப்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

நியூயோர்க்கில் ஈரானிய ஜனாதிபதி சையிட் இப்ராஹிம் ரைசுடன் நடைபெற்ற சந்திப்பில் பிரதமர் இந்த விருப்பத்தை வெளிப்படுத்தினார், என்று பேஸ்புக்   செய்தி  பகிர்வின் மூலம்  தெரிவிக்கப்பட்டது.

“இந்தச் சந்திப்பில், பொருளாதாரம், கல்வி, உணவுப் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பதன் மூலம் ஈரானுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த மலேசியாவின் விருப்பத்தை நான் வெளிப்படுத்தினேன், அத்துடன் புதிய வடிவிலான ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது,” என்று அவர் கூறினார்.

பரஸ்பர நன்மைகளுக்காக மலேசியா மற்றும் ஈரானுக்கு இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.  ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வில் கலந்து கொள்வதற்கு   அன்வார் தற்போது நியூயார்க்கில் உள்ளார்.

துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனுக்குப் பிறகு, நியூயார்க்கில் அன்வாரைச் சந்தக்கும் இரண்டாவது வெளிநாட்டுத் தலைவர் செயிட் இப்ராஹிம் ஆவார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.