நியூயார்க், செப் 21 - துருக்கியிடமிருந்து ராணுவ தளவாடங்கள் வாங்க மலேசியா விருப்பம் தெரிவித்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதற்கு முன்னர், மலேசியாவின் சில இராணுவ உபகரணங்கள் தென் கொரியாவிடமிருந்து வாங்கப்பட்டதாக அன்வார் கூறினார். துருக்கியிடமிருந்து பொருத்தமான ஆயுதங்களைத் தேர்ந்தெடுப்பது மலேசிய ஆயுதப் படை கவுன்சிலால் தீர்மானிக்கப்படும் என்று கூறினார்.
“நாங்கள் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வாங்க எண்ணம் கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், எது சிறந்தது என்பதை நான் ஆயுதப்படைகளுக்கு விட்டுவிடுகிறேன், ”என்று பிரதமர் நேற்று துருக்கிய மாளிகையில் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடனான இருதரப்பு சந்திப்பிற்குப் பிறகு இவ்வாறு கூறினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 78வது அமர்வில் கலந்துகொள்வதற்காக பிரதமர் தற்போது நியூயார்க்கில் உள்ளார்.
இராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்வது தொடர்பில் நிதியமைச்சகம் மற்றும் துருக்கிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவது பாதுகாப்பு அமைச்சிடம் தான் உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
அதே நேரத்தில், டிசம்பரில் எர்டோகன் மலேசியாவுக்குச் வருகை புரிய ஒப்புக்கொண்டதாக அன்வார் கூறினார்.
- பெர்னாமா


