NATIONAL

விபத்தில் சிக்கி தற்காலிக நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்ட மூத்தப் பாடகருக்குப் பிரதமர் நன்கொடை வழங்கினார்

20 செப்டெம்பர் 2023, 5:23 AM
விபத்தில் சிக்கி தற்காலிக நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்ட மூத்தப் பாடகருக்குப் பிரதமர் நன்கொடை வழங்கினார்

கோலாலம்பூர், செப் 20.: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 1990 ஆம் ஆண்டில் விபத்தில் சிக்கி தற்காலிக நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்ட மூத்தப் பாடகர் சைதோன் சமியோனுக்கு (67) நன்கொடை வழங்கினார்.

பிரதமர் வழங்கிய நன்கொடை அவரது அரசியல் செயலாளர் அஹ்மட் ஃபர்ஹான் பௌசியால் சைதோன் சமியோனுக்கு வழங்கப்பட்டதாக முகநூலில் தெரிவித்தார்.

"சமூக நலத்துறை (ஜே.கே.எம்) சைதோனுக்கு முதியோர் உதவியை உடனடியாக நிறைவேற்றும்" என்று பிரதமர் கூறினார்.

மேலும், 1990 இல் சைதோனுக்கு ஏற்பட்ட விபத்து அவரது ஒரே பிள்ளையின் உயிரையும் பறித்தது குறிப்பிடத்தக்கது.

தனது வளர்ப்பு மகனின் வீட்டில் தங்கியிருந்து, பாடுவதற்குப் பல வாய்ப்புகள் கிடைக்காமல் வறுமையில் வாடுவதால், ஜே.கே.எம் மாதாந்திர நிதி உதவிக்காக சைதோன் காத்திருப்பதாக ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.