NATIONAL

ஐ.நா. பொதுப் பேரவையில் பங்கேற்க பிரதமர் நேற்றிரவு நியுயார்க் பயணமானார்

20 செப்டெம்பர் 2023, 3:04 AM
ஐ.நா. பொதுப் பேரவையில் பங்கேற்க பிரதமர் நேற்றிரவு நியுயார்க் பயணமானார்

கோலாலம்பூர், செப் 20- ஐக்கிய நாடுகள்

சபையின் (ஐ.நா.) 78வது பொது பேரவையில்

பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ

அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு நியூயார்க்

பயணமானார்.

அன்வாருடன் அவரது மனைவி டத்தோஸ்ரீ

டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்

மற்றும் மலேசிய பேராளர் குழுவின் மற்ற

உறுப்பினர்களும் இப்பயணத்தில் இடம்

பெற்றுள்ளனர்.

உலகத் தலைவர்களுடனான இந்தச் சந்திப்பில், 2030

பணி நிகழ்ச்சி நிரலை அடைவதற்கு ஏதுவாக பருவநிலை

நெருக்கடியைக் கையாள்வதில் மலேசியாவின்

முயற்சிகளை தாம் பகிர்ந்து

கொள்ளவுள்ளதோடு மலேசிய மடாணி

கட்டமைப்பின் கீழ் நாட்டின் திட்ட மேம்பாடு

மற்றும் பல உலகளாவிய பிரச்சினைகள்

குறித்தும் உரையாற்றவுள்ளதாக பிரதமர்

தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய பேராளர்குழுவின் இந்தப் பணி

சுமூகமாக நடைபெற பிரார்த்தனை

செய்யுங்கள் என்று அவர் கூறினார்.

ஐ.நா.வின் இந்த வருடாந்திர பொதுப்

பேரவையில் பிரதமர் அன்வார்

கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.

வரும் வெள்ளிக்கிழமை பொது பேரவையில்

மலேசியாவின் தேசிய அறிக்கையை அவர்

வழங்க உள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.