ஷா ஆலம், செப் 19: நிபுணத்துவம், கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிஎச்எஸ்) மற்றும் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் (எம்எஸ்யு) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) கையெழுத்திட்டன.
மூன்று ஆண்டு ஒத்துழைப்பு முயற்சிகளில் கண் பரிசோதனைகள், மூக்கு கண்ணாடிகள் வழங்கல் மற்றும் எம்பிஎச்எஸ் ஊழியர்களுக்கு ஆலோசனை சேவைகள் அளித்தல் ஆகியவை அடங்கும் என்று கார்ப்பரேட் பிரிவு அறிக்கை ஒன்றில் மூலம் தெரிவித்துள்ளது.
"பணியை மேற்கொள்வதில் தனிப்பட்ட திறன் மற்றும் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக வாழ்நாள் முழுவதும் கற்றல் என்ற கருத்துடன் எம்பிஎச்எஸ் ஊழியர்களுக்கு எம்எஸ்யுவில் மேலும் கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
"கூடுதலாக, ஜாலான் பூங்கா பாக்மா, புக்கிட் பெருந்துங்கில் உள்ள வணிகக் கடை கட்டிடத்தின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம், சமூகத் திட்டங்களுக்கு நிதி அளிக்க எம்பிஎச்எஸ் நிதியில் சேர்க்கப்படும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எம்பிஎச்எஸ் தலைவர் முகமட் ஹஸ்ரி நோர் முகமட் கையெழுத்திட்டார். எம்எஸ்யு சார்பில் அதன் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ வீரா டாக்டர் முகமட் சுக்ரி அப்துல் யாஜித் பங்கேற்றார்.
அந்த ஒப்பந்தத்தின் மூலம் எம்பிஎச்எஸ் மற்றும் எம்எஸ்யு ஆகியவை உலு சிலாங்கூர் பகுதியில் மக்கள் தொகை, வணிகம், தொழில், உடல் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா ஆய்வுகளில் தகவல் பகிர்வு ஆகியவற்றில் ஸ்மார்ட் கூட்டாண்மை களை உருவாக்கும்.
"கூடுதலாக, புதுமை மையத்தின் கட்டுமானமானது தொழில்துறை கட்டிட தொழில் நுட்பத்தை (IBS) பயன்படுத்துகிறது. இது நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) மற்றும் குறைந்த கார்பன் நகர கட்டமைப்பு (LCCF) ஆகிய அம்சங்களுக்கு ஆதரவாக மிகக் குறைந்த கார்பன் வீதத்தைக் கொண்டுள்ளது.
"2030 ஆம் ஆண்டில் குறைந்த கார்பன் நகரத்தை நோக்கிய முயற்சிகளை உணர முடியும் என்ற நோக்கில் இந்த திட்டம் எம்பிஎச்எஸ்ஆல் முதல் முறையாக நடத்தப்பட்டது," என்று அவர் விளக்கினார்.








