NATIONAL

அரிசி ஏற்றுமதி தடைகளுக்கு "சிறந்த தீர்வை" காண மலேசியா இந்திய அரசாங்கத்துடன் பேசச்சுவார்த்தை நடத்தும்

19 செப்டெம்பர் 2023, 9:48 AM
அரிசி ஏற்றுமதி தடைகளுக்கு "சிறந்த தீர்வை" காண மலேசியா இந்திய அரசாங்கத்துடன் பேசச்சுவார்த்தை நடத்தும்

கோலாலம்பூர், செப் 19 - புதுடெல்லியின் அரிசி ஏற்றுமதி தடைகளுக்கு "சிறந்த தீர்வைக்" கண்டுபிடிக்க மலேசியா இந்திய அரசாங்கத்துடன் பேசச்சுவார்த்தை நடத்தும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு நேற்று தெரிவித்தார்.

வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற பிற விநியோகர்களுடனும் பெர்னாஸ் பேச்சுவார்த்தை நடத்தும் என்று முகமட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெப்பமான வானிலை அறுவடைகளுக்குத் தடையாக அமைந்துள்ளது. உயர் ஏற்றுமதியாளர் இந்தியா தலைமையிலான நாடுகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துகின்றன.

புத்ராஜெயா நாட்டிலுள்ள அரிசி ஆலைகளை ஒரு வருடத்திற்கு 20 வீதம் மாதாந்திர உற்பத்தியை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. தற்போதைய உள்நாட்டு அரிசி தட்டுப்பாடு ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக முகமட் கூறினார்.

நாட்டில் தற்போது 900,000 மெட்ரிக் டன் அரிசி கையிருப்பு உள்ளது, இது நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு அதன் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது என்று முகமட் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.